செங்கம் அருகே அடிப்படை வசதியான தெருவிளக்கு இல்லாமல் தத்தளிக்கும் கிராமக்கள். தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதிய குயிலம் பகுதியில் அடிப்படை வசியான தெருவிளக்கு வசதி இல்லாமல் தத்தளித்து வந்த கிராம மக்கள் மின் கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி நூதன போராடத்தில் ஈடுபட்டனர் .செங்கம் அடுத்த புதியகுயிலம் கிராமத்தில் கடந்த பத்து நாட்களாக தங்கள் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்கு எரியாமல் உள்ளதாக ஊராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்ததாகவும் இதனை கண்டுகொள்ளாமல் ஊராட்சி செயலாளர் அலுட்சியமாக செயல்பட்டதால் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் சென்று மனு அளித்தும் இதுவரையிலும் தங்கள் பகுதியில் மின் கம்பத்தினை சீரமைக்கவில்லை என வேதனை அடைந்து வந்துள்ளனர்.புதிய குயிலம் பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மின் கம்பங்கள் இருந்தும் இதில் முப்பது கம்பங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருவதாகவும் மீதமுள்ள கம்பங்களில் விளக்கு எரியாமல் உள்ளதாக தெரிவிக்கின்றனர் இதனால் கிராமத்தில் உள்ள அணைவரும் ஆறுமணிக்கு மேல் தங்கள் வீட்டை விட்டு வெளிய வரமுடியாத சூழல் நிலவிவருவதாக தொிவிக்கின்றனர்  கிராமம் முழுவதும் இருளில் முழ்கி வருவதால் திருட்டு சம்பவம் அறங்கேரும் அபாயம் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.ஊடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்படாத ஊராட்சி செயலாளர் ரவி மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பகுதியில் தெரு விளக்கு சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..