
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது முகமது, 24. கார் டிரைவரான இவர் கடந்த 2014, அக்டோபர் 14ஆம் தேதி மாலை , எஸ்.பி. பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு செய்யது முகமதுவை என்கவுன்டர் செய்த சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரனை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் முன் வந்தது. விசாரணைக்கு பின், சார்பு ஆய்வாளர் காளிதாசுக்கு ரூ. 2 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகமதுவின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டார்.