இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உலக தரம் தின விழா

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்று (14.11.2019) உலக தரம் தின விழா நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ‘தூய்மை உறுதிமொழி” எடுத்துக் கொண்டனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது:பிரதமர் உத்தரவின்படி, இந்திய அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல, தமிழக முதல்வரின் உத்தரவின்படி தமிழகத்தில் 01.01.2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு சுற்றுப்புற சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. வளமான வாழ்விற்கு சுற்றுப்புறத்தூய்மை இன்றியமையாததாகும். அந்த வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது கடமையாகும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் மருத்துவ நலப்பணிகள் மரு.வெங்கடாசலம், இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், நிலைய மருத்துவ அலுவலர் மரு.ஞானகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

டிசம்பர் மாத இதழ்..

டிசம்பர் மாத இதழ்..