திருப்புல்லாணி  அரசு பள்ளியில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும் கருத்தரங்கு

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் ‘பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.  மன்ற செயலாளர்  வே.ராஜகுரு முன்னிலை  வகித்தார். ஏழாம் வகுப்பு மாணவர் மு.சண்முகராஜ் வரவேற்றார். பள்ளி.உதவி தலைமையாசிரியர் இ.சண்முகநாதன்  தலைமை வகித்துப் பேசுகையில் “உலகளவில் நமது கலைகள் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இவற்றின் சிறப்பை அறிந்து மாணவர்கள் அவற்றை பாதுகாக்கவேண்டும்” என்றார்.  ஓவியக்கலை குறித்து ஜீ.ஹரிதா ஜீவா, சிற்பக்கலை குறித்து க.அபிராமி, நிகழ்கலை குறித்து வி.டோனிகா, மண்பாண்டக்கலை குறித்து மு.பிரவீணா, கப்பற்கலை குறித்து சே.ஆனந்தி, தமிழர் வணிகம் குறித்து ஜெ.யோகஸ்ரீ ஆகியோர் பேசினர். 8-ம் வகுப்பு மாணவர் மு.மகேஸ்வரன்நன்றிகூறினார்.8ம் வகுப்பு மாணவிகள் சு.முத்துமாரி, ஜெ.சுஜிதாஸ்ரீ ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாணவர்கள் து.மனோஜ், பாலாஜி, அஸ்வின்ராஜ், அபிஷேக், வைநவீன்  ஆகியோர் செய்திருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image