இராமநாதபுரத்தில் குழந்தைகள் தின விழா

இராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று (14/11/19) பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் விழா நடத்தப்படுகின்றது.குழந்தைப் பருவம் என்பது மிகவும் இனிமையான காலகட்டம். குழந்தைகள் ஆக்கப்பூர்வ விஷயங்களை கற்றறிந்து சமுதாயத்தில் நல்லொழுக்கத்துடன் வளர்வதற்கான சூழ்நிலையை வழங்குவது பெரியவர்கள் அனைவரது கடமை. சுற்றுப்புறதூய்மை பராமரிப்பு, ஆரோக்கியமான உணவு பழக்கம், பிறரிடம் அன்பு பாராட்டுதல் போன்ற பல்வேறு நற்பண்புகளை சிறு வயது முதலே குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்   என்றார் . இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவலெட்சுமி ‘சமுதாய வளர்ச்சியில் குழந்தைகளின் பங்கு” என்ற தலைப்பிலும், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவி மௌனிகா பங்கேற்ற பரதநாட்டிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.இவ்விழாவில், கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) மா.பிரதீப்குமார், முதன்மைக்கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் எஸ்.துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image