
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வீ.வருண் குமார் நவ.7ல் பொறுப்பேற்றார். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 94899 19722 என்ற செல்போன் எண்ணை பொதுமக்களிடம் பிரபலப்படுத்துமாறு பத்திரிகைகள் மூலம் வேண்டுகோள் விடுத்தார். இந்த எண் அறிமுகப்படுத்திய நவ.7 முதல் நவ. 12 ஆம் தேதி வரை 64 புகார்பெறப்பட்டுள்ளது. நவ.9 ஆம் தேதியன்று, சாயல்குடி பகுதியில் இளைஞர்கள் சூதாடுவதாக கிடைத்த தகவல் படி, சாயல்குடி போலீசார் துரித மாக சம்பவ இடம் சென்றனர்., சூதாடிய 7 பேரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர். தெரிய வந்தது. இச்சம்பவத்தில் அவர்கள் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தெரிந்தது. மாணவர்களின் எதிர்கால நலன்கருதி அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி சாயல்குடி போலீசில் மனு ரசீது பதிவு செய்து பிள்ளைகளை கண்காணிப்புடன் பார்த்து கொள்ளும்படி, அறிவுறுத்தி அனுப்பினர். பரமக்குடி நகர் காவல் எல்கைகுட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை, நயினார்கோவில் காவல் எல்கைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்றார். இதுதொடர்பாக, 94899 19722 என்ற எண்ணில் புகார் வந்தது. பரமக்குடி நகர் போலீசில் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை பாளையங்கோட்டை இளஞ்சிறார் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலப்பட மது பாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இப்புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி, ஆர்.எஸ் மங்கபம், ராமேஸ்வரம்
கோவில், பரமக்குடி நகர் மற்றும் வாலிநோக்கம் போலீஸார் துரிதமாக செயல்பட்டு தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதியில் 216கலப்பட மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, கலப்பட மது பாட்டில் விற்க முயன்றதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். குடும்ப பிரச்னைகள் தொடர்பான பல்வேறு புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் எல்கைக்குட்பட்ட போலீசார் விரைந்து சென்று, அப்பிரச்னைகளை
தீர்த்து வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் தனிக்கவனம் செலுத்தி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்திப்பில் சுழற்சி முறையில் 4 போக்குவரத்து போலீஸார் நியமித்து, தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாவண்ணம் கண்காணிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார். புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் குறித்து 94899 19722 என்ற கைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.