கண்மாய் கொட்டப்பட்ட டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள். சுகாதார செயலாளர் ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு!

மதுரை அடுத்த கருப்பாயூரணி அருகே உள்ள வீரபாஞ்சான் கண்மாய்  உள்ளது. இது சுமார் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்கள் பாசனத்திற்காக பயன்படுத்தும் கண்மாய் சிலர் வாகனங்களில் வந்து சிறுநீர்ப்பை பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் காலாவதியான பிளாஸ்டிக் பைகள் மருந்து மாத்திரைகள் சிறுநீரகப்பை உள்ளிட்ட கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற மதுரை மாவட்ட பாஜக போராட்டக்குழு தலைவர் குரு சந்திரசேகர்  கூறியது, கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் மருத்துவ கழிவுகளை இங்கே கொட்டியது யாரென்றும் தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியாளரிடம் மற்றும் சுகாதாரத் துறையும் போலீசில் புகார் கொடுத்துள்ளோம் என தெரிவித்தனர் .மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த சுகாதாரத் துறை அதிகாரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image