சிவந்த மண்-நினைவலைகள்

நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்” நடித்த  “சிவந்த மண்” திரைப்படம். 1969 ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் அப்போதைய அவரது ரசிகர்களால் ஏகோபித்த “பாராட்டை பெற்றது. சிவாஜி நடிப்பில் முதன் முதலாக வெளிநாட்டில் தயாரிக்க பட்ட திரைப்படம் “சிவந்தமண்” என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள் சென்ட்ரல் திரையரங்கில் “பொன் விழா” ஆண்டை கொண்டாடினர்.இதையொட்டி ரசிகர்களுக்கு “இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சென்ட்ரல் திரையரங்க உரிமையாளர்களுக்கு “பாராட்டு கேடயமும்”, பணியாளர்களுக்கு “புத்தாடைகளும்”வழங்கப்பட்டது.மேலும் இந்த திரையரங்கில் 53 வருடங்களாக டிக்கெட் வழங்கும் பணி செய்து வரும் “சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்” “செல்லையா” என்பவருக்கு “சால்வை மற்றும் “மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இவ்விழாவிற்கு சிவாஜி பைன் ஆர்ட்ஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு செயலாளருமான சந்திரசேகரன் தலைமை வகித்தார். குணா மூவீஸ் குணசேகரன் முன்னிலை வகித்தார்.இதில் சிவாஜி பைன் ஆர்ட்ஸ் உறுப்பினர்கள் கணேசன், இன்பசேகரன், கௌரவ தலைவர் கணேசன், செல்வராஜ், பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.விழா முடிவில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் தென்மண்டல செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..