மதுரையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்த போராட்டம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிங்கள் இருந்தும் அவை நிரப்பப்படாமல் உள்ளது.ஆனால் தமிழக மின்சார வாரியம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை பணி அமர்த்தி அவசர காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்காக பணி செய்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு தகுந்த ஊதியம் கொடுப்பதில்லை என்று ஒப்பந்த பணியாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.மதுரை மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்காததை கண்டித்தும், மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்த ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், கேங்மேன் பதவியை உடனடியாக தடை செய்ய கோரியும் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதில் 200 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை கனகராஜ்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..