Home செய்திகள் இந்தியா முழுவதும் ‘இன்று’குழந்தைகள் தினம் கொண்டாட்டம்.!

இந்தியா முழுவதும் ‘இன்று’குழந்தைகள் தினம் கொண்டாட்டம்.!

by Askar

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் இன்று, நாட்டு மக்கள் அன்போடு நேரு மாமா என்று அழைக்கும் நேரு அவர்களின் பிறந்த தினம் இன்று.

ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான இன்று அவருக்கு மிகவும் விருப்பமான குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டு மக்களிள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன் குறித்து சிந்தித்தவர் ஜவஹர்லால் நேரு. இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களின் நலன் குறித்து ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஐந்தாண்டு திட்டங்களில் மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது குழந்தைகள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட திட்டங்களே.

நாடு முழுவதும் நேரு மாமாவின் பிறந்த தினம் கருதி குழந்தைகளுக்கான கொண்டாட்டம் நடைபெறுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் எண்ணம், கல்வி, செயல் சிறக்க அரசும் திட்டங்களை தீட்டி வருகின்றது .

குழந்தைகள் தின கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று (நவம்பர் 14) விமர்சையாக குழந்தைகளை வைத்து கொண்டாடுகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான விதவிதமான வண்ண அழங்காரங்களுடன் அவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும்.

வண்ண பூக்கள் அழங்கரித்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும். குழந்தைகளுக்கு இன்று மாறுவேட போட்டிகள் நடத்தப்படுகின்றது. பால் திவாஸ் என நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்நாளில் தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் குழந்தைகளுக்கு புதிதாக பரிசுகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவார்கள். இந்த தேசத்தின் மிகப்பெரிய நாளைய உந்துசக்தி இன்றைய குழந்தைகள் ஆவார்கள் என்பதை இந்த சமுகம் உணர்ந்துள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்வது , அவர்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது உள்ளிட்ட திட்டங்களை அரசும் கொண்டு வருகிறது. குழந்தைகளின் ஆரம்பக் கல்வியினை உறுதி செய்வது நமது கடமையாகும். இதனை வழங்க அனைத்து பெற்றோர்களும் உறுதி மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் தினம் சம்பந்தமாக திண்டுகல்லைச்சேர்ந்த திருமதி K.நவ்ரீன் கூறியதாவது,

குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக செயல் பட வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும். எனக் கூறினார்.திருமதி K. நவ்ரீனுக்கு, ஒரு சிறந்த தாயாக விளங்க நமது சத்தியப்பாதை மற்றும் கீழை நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள் கூறினோம்.!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!