இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுடன் முப்பெரும்விழா கொண்டாட்டம்..

இன்று 14.11.2019 சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, தேசியப் பசுமை படையின் 50 மரக்கன்றுகள் நடும் திட்டம் விழா, மாணவர் பெற்றோர் உறவை மேம்படுத்த இருவரும் சேர்ந்து 200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்னு ஆசிரியர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இனிப்புகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் மாணவர்கள் இணைந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பெர்ணடிட் மற்றும் விதைகள் அமைப்பு சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். சாம்ராஜ் ஆசிரியர் பேசுகையில், இன்று ஒரு நாள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசவேண்டும், பாடல், விளையாட்டு ,நடனம் நகைசுவை சார்ந்த செயல்களில் நேரம் செலவிட வேண்டும். என்று பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு உரையாற்றினர். பள்ளி கல்வி துறையின் அறிவுறுத்தல் படி இன்று பெற்றோர் மாணவர்கள் இணைந்து சாந்தி ஆசிரியருடன் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் பெற்றோர் – மாணவர்கள் உறவை வலுப்படுத்த இருவரும் சேர்ந்து பள்ளியில் மரக்கன்றுகள் நட்டனர். ஒரே நாளில் 250 மரங்களை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நட்டனர். ஆசிரியர் செந்தில் வடிவேலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சுவாமிதாஸ் ஆசிரியர் நன்றி கூறினர்.

மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஈஸ்வரன், கிராம கல்வி குழு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் கிராம தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பள்ளி பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் மற்றும் தலைமை ஆசிரியர் செல்வராஜ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.

சுற்றுச் சூழல் துறையின் தேசிய பசுமை படை 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்களை மரம் வளர்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக்கன்று கொடுக்கப்பட்டது. மாணவன் தனது பராமரிப்பில் வளர்ப்பார். சுற்றுச் சூழல் துறை 8 மாதங்களுக்கு பிறகு சிறப்பாக மரம் வளர்ப்போருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image