உசிலம்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற கோட்டாச்சியா் எச்சாிக்கை

உசிலம்பட்டி பேருந்து நிலையம் சந்தைப்பகுதிகள் வணிக வளாகங்களின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோட்டாட்சியர் சௌந்தர்யா உத்தரவிட்டார்.மதரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் சந்தைப்பகுதிகளில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் பூ மார்க்கெட் இறைச்சி கடை பகுதி மற்றும் மதுரை ரோடு. பேரையூர்; ரோடு. தேனிரோடு போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாகவும் இதனால் நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோட்டாட்சியர் சௌந்தர்யாவிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் ஒருவாரத்திற்குள் கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புக்களை அகற்றாவிட்டால் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் என கோட்டாட்சியர் சௌந்தர்யா தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..