Home செய்திகள் உசிலம்பட்டியில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என வலியுறுத்தி நடைபெற்ற வித்தியாசமான திருமண விழா

உசிலம்பட்டியில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என வலியுறுத்தி நடைபெற்ற வித்தியாசமான திருமண விழா

by mohan

உசிலம்பட்டியில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என வலியுறுத்தி நடைபெற்ற வித்தியாசமான திருமண விழா நிகழ்ச்சி.பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணி அமரஜோதி வசந்தி இவர்களின் மகன் கௌதம்ராஜ் – க்கும் முண்டுவேலம்பட்டி ஆதர்மலை பாண்டியம்மாள் இவர்களின் மகள் சுந்தரசெல்வி – க்கும் பெற்றோர்களின் சம்மததுடன் திருமணம் நிச்சியக்கப்பட்டு உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண தம்பதியர்கள் அடுத்த தலைமுறைகளுக்கு பாடம் புகட்டும் நோக்கிலும், உசிலம்பட்டி பகுதியில் போதிய மழை பெய்யாததால் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற நோக்கிலும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.இதனால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் மனதில் பெரும் நல்ல வரவேற்பை பெற்றனர் இந்த திருமண தம்பதிகள்.மேலும் இது போன்று உசிலம்பட்டி பகுதியல் திருமண விழா, பள்ளி விழா, கோயில் திருவிழா, விளையாட்டு விழா போன்ற விழாக்களில் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதும் மழை பெய்யும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி 58 கிராம விவசாயிகள், உறவினர்கள், ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை உறவினர் அஜித்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!