இராமநாதபுரத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

இராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் முனீஸ்வரன், 22. வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றித்திரிந்தார். திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவரது தம்பி குமார் , வெளியில் செல்லும்போது இதோ திருடன் தம்பி போகிறான் என பலர் அவதூறு பேசிவந்தனா. இதனால் மன உளச்சல் அடைந்த குமார் , முனீஸ்வரனின் கன்னத்தில் முருங்கை தட்டையால் நேற்றிரவு12.11.19 தாக்கினார். இதில் காதில் ரத்தம் வடிந்த நிலையில் முனீஸ்வரனை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். முனீஸ்வரனின் தாயார் பாப்பா புகாரில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..