மதுரையில் வெவ்வேறு இரு இடங்களில் இரத்த தானம் முகாம்

மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள டொயோட்டா நிறுவனத்தில் மதுரை ராசாசிஅரசு மருத்துவமனை இரத்த தான பகிர்மானக கழகம், ஏ.ஆர்.சி குரூப் ஆப் கம்பெனிஸ், மதுரை ரவுண்ட் டேபிள்-14, மதுரை மகளிர் வட்டம்-8, மதுரை நகர் ரவுண்ட் டேபிள்-99 மற்றும் மதுரை மகளிர் வட்டம் 60 ஆகியோரும் இணைந்து இரத்த தான முகாமை நடத்தினர். இம்முகாமிற்கு மதுரை இ.எஸ்.ஐ துணை இயக்குனர் அருள்ராஜ்  சிறப்பு விருந்தினராக தலைமையேற்று துவக்கி வைத்தார். ஆனைமலைஸ் டொயோட்டா உதவிப் பொது மேலாளர் சேதுராஜன்,நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சோனி ரங்கராஜன், மற்றும் பொது தொடர்பு அலுவலர் சண்முகம் அவர்களும் உடன் இருந்தனர்.

இதே போல் மதுரை தேவதாஸ் மருத்துவமனையிலும் மதுரை வாலண்ட்ரி இரத்த வங்கியின் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமை தேவதாஸ் மருத்துவ மனையின் சேர்மன் பேராசியர் Dr.தேவதாஸ்  தலைமையேற்று துவக்கி வைத்தனர். Dr.சதீஸ்  உடன் இருந்தனர்.இந்த முகாமின் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் மதுரை ரவுண்ட் டேபிள்-14 சேர்மன் M.ரகுராம் மற்றும் மதுரை மகளிர் வட்டம்-8 சேர்மன் சுகன்யா ரகுராம் செய்திருந்தனர்.மேலும் மதுரையில் உள்ள அனைத்து கார் நிறுவனங்களிலிருந்தும், ARAS குரூப்ஸ், சுசீ குரூப்ஸ், சுசீ பைனான்ஸ்,அபர்ஜிதா மற்றும் அருணா அலாய்ஸ் போன்ற நிறுவனங்கள் பங்கேற்றனர். ஆனைமலை ஸ் டொயோட்டா நிறுவனத்தில் வருடத்திற்கு மூன்று முறை இது போன்ற முகாமினை மதுரை அரசு மருத்துவமனை உதவியுடன் நடத்தி வருகின்றதாகவும், கடந்த வருடம் 60 யூனிட்டுக்கும் அதிகமாக வழங்கப்பட்டதுஎனவும் இந்த முறை 100க்கும் மேற்பட்ட யூனிட் இரத்தம் சேகரிக்கப்படும் என எதிர் பார்க்கிறோம் என்று மதுரை மகளிர் வட்டம்-8 சேர்மன் சுகன்யா ரகுராம் தெரிவித்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image