உசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வட்டாச்சியரை முற்றுகையிட்டனர்.

58 கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வட்டாச்சியரை முற்றுகையிட்டனர்.வைகை அணையிலிருந்து வெளியாகும் உபரி நீரைக் கொண்டு 58 கிராம கால்வாய்த்திட்டம் செயல்படுகிறது.இதில் தண்ணீர் திறக்க நிரந்த அரசாணை வெளியிட வலியுறுத்தி 58 கிராம பாசன சங்கத்தினருடன் இணைந்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வட்டாச்சியர் செந்தாமரை தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் விவசாயிகள் 58கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை கேட்டு திடீரென்று கூட்டத்தை புறக்கணித்து வட்டாச்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைதொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..