நூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பேட்டி அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், நூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பேட்டி அளித்தார்.இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி, கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பால் குளிரூட்டும் மையம் 14.69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது.மேலும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சி, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலக வளாகத்தில், ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள நவீன ஆவின் பாலகம் அடிக்கல் நாட்டு விழாவில் பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image