உற்சாக பானம் அன்று… ஆரோக்கிய பானம் இன்று… கீழக்கரையில் மதுக்கடைளை மூடியது தொடர்ந்து கொண்டாட்டம்…

கீழக்கரையில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான பேருந்து நிலையம் பகுதியில் அனைவருக்கும் தொந்தரவு அளிக்கும் வகையில் நடைபெற்று வந்த இரு மதுபான கடைகள் ஆட்சியர் உத்தரவின் பேரில் மூடப்பட்டது.

கடந்த பல மாதங்களாக அக்கடைகளை மூட  கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் பல அமைப்புகள் மனு அளித்தனர். ஆனால்  எந்த தீர்வும் எட்டப்படாத சூழலே நீடித்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நாம்தமிழர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ, வீரகுல தமிழர் படை, கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு  சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் உத்தரவின் பேரில் நேற்று (11/11/2019) முதல் நிரந்தரமாக டாஸ்மாக் கடை மூட உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பை கொண்டாடும் விதமாக  திமுக மாணவரனி செயலாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான் தலைமையில் டாஸ்மாக் மூட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து  கடைக்கு முன்பாக பொதுமக்களுக்கு மோர் வழங்கினர்.

மேலும் இதில் மஹ்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுந்தரம், மக்கள் டீம் காதர், கெஜி, அஜ்மல் கான், நயினார் அய்யா,  திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் எஸ்.கே.வி.சுஐபு, எபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..