பார்த்திபனூர் மதகணை வந்த வைகை தண்ணீர் இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறப்பு

வைகை அணையிலிருந்து மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு 09.11.2019 முதல் 16.11.2019 வரை 8 நாட்களுக்கு 1,441 மில்லியன் கனஅடி வீதம், வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு 17.11.2019 முதல் 21.11.2019 வரை 5 நாட்களுக்கு 386 மில்லியன் கனஅடி வீதம் 22.11.2019 முதல் 25.11.2019 வரை 5 நாட்களுக்கு 48 மில்லியன் கனஅடி வீதம் பூர்வீக பாசனப் பகுதிக்கு 26.11.2019 முதல் 02.12.2019 வரை 7 நாட்களுக்கு 240 மில்லியன் கனஅடி வீதம் என முறையே அணையின் நீர் இருப்பு, நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டர். அதனடிப்படையில், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நலனுக்காக வைகை அணையில் இருந்து 09.11.2019 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று (12.11.2019) பார்த்திபனூர் மதகணையை வந்தடைந்தது.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன் (இராமநாதபுரம்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தண்ணீரை மலர் தூவி வரவேற்று, பார்த்திபனூர் மதகணையில் இருந்து, இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீரை திறந்து வைத்தனர்.பார்த்திபனூர் மதகணையில் இருந்து தற்போது வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பார்த்திபனூர் மதகணையில் இருந்து இராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை உள்ள முறை பாசன கண்மாய்களுக்கு பாசன வசதி செய்யும் பொருட்டு இடது, வலதுபுறம் கால்வாய் மூலம் தண்ணீர் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் 67,837 ஏக்கர் பரப்பு நிலம் பாசன வசதி பெறும்.இந்நிகழ்வின் போது, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) தலைமைப் பொறியாளர் எஸ்.ஞானசேகரன், செயற்பொறியாளர் எஸ்.வெங்கிட கிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் ஜி.சிவராம கிருஷ்ணன், கார்த்திகேயன், பரமக்குடி வட்டாட்சியர் சதீஷ்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் லதா, கார்த்தி, ஆனந்த்பாபுஜி உள்பட அரசு அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image