Home செய்திகள் இராமநாதபுரத்தில் ஒத்திவைத்த போலீஸ் உடற்திறன் தேர்வு வரும் 18ல் மீண்டும் தொடக்கம்

இராமநாதபுரத்தில் ஒத்திவைத்த போலீஸ் உடற்திறன் தேர்வு வரும் 18ல் மீண்டும் தொடக்கம்

by mohan

2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு வரும் ம் தேதி முதல் நடைபெற உள்ளது. 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1119 ஆண்கள், 309 பெண்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 911 ஆண்கள் மற்றும் 247 பெண்கள் என 2586 விண்ணப்பதாரர்களுக்கு இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் தனித்திறன் மற்றும் உடற்திறன் தேர்வு கடந்த 06.11.2019 முதல் நடைபெற்று வந்தது. இத்தேர்வானது, சட்டம் ஒழுங்கு காரணமாக கடந்த 09.11.2019-ம் தேதி முதல்ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 11.11.2019-ம் தேதியன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமஅறிவிப்பின்படி, போலீஸ் உடற்திறன் தேர்வானது, வரும் 18.11.2019-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இத்தேர்வானது, கடந்த 09.11.2019-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 18.11.2019-ம் தேதி அன்றும், 11.11.2019-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 19.11.2019-ம் தேதி அன்றும், 12.11.2019-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 20.11.2019-ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபாப்பு 21.11.2019-ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்துடன், இராமநாதபுரம் மாவட்ட விண்ணப்பதாரர், இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்திலும், சிவகங்கை மாவட்ட விண்ணப்பதாரர் சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்திலும் 13.11.2019, 14.11.2019, 15.11.2019 ஆகிய மூன்று நாட்களுக்குள் நேரில் சென்று, அழைப்பு கடிதத்தில் புதிய தேதியிட்ட முத்திரையை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர் புதிதாக குறிப்பிட்டுள்ள தேதிகளில், புதிய தேதியிட்ட அழைப்பு கடிதத்துடன் சரியாக காலை 5.00 மணிக்கு இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய தேதியில் மட்டுமே விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவர். எக்காரணம் கொண்டும் மாற்று தேதிகளில் அனுமதிக்கப்பட்டமாட்டர். தாமதாக வரும் விண்ணப்பதாரர் கண்டிப்பாக மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!