இராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கே.மணிமொழி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் என்.வெங்கடேஷ், பி.முத்து லட்சுமி, ராமசுப்பு, முருகேஸ்வரி, வி.சுதா, வி.தாளேஸ்வரி, என்.சவுந்தரவள்ளி, ஏ.சகாய தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் எம்.எம்.ராஜேந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கே.சோமசுந்தர், மாவட்ட செயலர் பி.சேகர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலர் ஏ.முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கணேசமூர்த்தி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலர் ஏ.ராஜேந்திரன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் எஸ்.முத்து முருகன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் டி.அமிர்தா ஆகியோர் பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பி.பாண்டி நிறைவுரை பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் என்.கண்ணகி நன்றி கூறினார். சத்துணவு துறையில் கடந்த 37 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை வழங்க வேண்டும்,, பணி நிறைவு பெறும் ஊழியர்களுக்கு வழங்கும் பணிக்கொடை ரூ.1 லட்சத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு தயாரிப்பிற்கு தினமும் வழங்கப்படும் செலவு தொகையை விலை உயர்விற்கேற்ப மாணவருக்கு தலா ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 60 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..