அரசு இ-சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலித்த ஊழியர் பணியிடை மாற்றம்-ஆலங்குளம் வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு-இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு ஆதார் திருத்தம் செய்வதற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு ஆலங்குளம் போதி சேவா சங்கம் சார்பில் புகார் அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் இசேவை மையத்தில் ஆதார் திருத்தம் செய்யும் ஊழியர் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மீறி அதிகப்படியான கட்டண தொகை வாங்கிய புகாரின் பெயரில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஆதார் திருத்தம் செய்ய அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டண தொகை ரூ 50 மட்டுமே வசூலிக்கப்படும் என அரசு அறிவிப்பு பதாகை அமைத்து பொதுமக்கள் பயன் பெரும் வகையில் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.வருவாய் வட்டாட்சியரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.துரித நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியருக்கு பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image