கீழக்கரையில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தொடரும் ஆலோசனை கூட்டம்…

கீழக்கரையில் 11/11/2019 அன்று அனைத்து சங்கங்களும், அமைப்புகளும் ஒருங்கிணைந்து எதிர்வரும் நகராட்சித் தேர்தலில் நேர்மையான மக்களுக்கு சேவையாற்றும் மனப்பான்மை உடையவர்களை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க மூன்றாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல் வேறு சங்கங்கள், சமூக அமைப்புகள் என சுமார் 30க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாஹிப் தலைமை வகித்தார்.

அனைத்து சங்கங்களின் தலைவர்களும் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும், இதற்கு முன்பு நமது ஊரில் நடைபெற்ற நிலைகளுக்கான, வருத்தத்தையும் அதற்கான ஆதங்கத்தையும் பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியினை இன்ஜினியர் கபீர் அவர்கள் தொகுத்து வழங்கினார். முகமது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹாமித் இப்ராகிம் நன்றி கூறினார்.

கீழக்கரையை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிலேயே முன்மாதிரியான நகராட்சியாக கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பும் எடுக்கப்டும் என்ற கருத்தை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..