மதுரை செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கதவுகள் விளக்குகள் இல்லாமல் அவதி. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்

செங்கோட்டை மதுரை பாசஞ்சர் ரயிலில் கழிவறை கதவுகள் சேதமடைந்து விளக்குகள் எரியாமலும் உள்ளது. இதனால் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு வரும் பொழுது இரவு நேரம் என்பதால் பெண்கள் அச்சத்துடனே கழிவறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை ரயில்வே நிர்வாகம் தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். தினசரி சுமார் 500க்கும் மேற்பட்ட மதுரையில் இருந்து பெண் பயணிகள் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரயில்களில் தான் வேலைகளுக்கு சென்று வருகிறார்கள். உடனடியாக செங்கோட்டை மதுரை பாசஞ்சர் ரயிலில் கழிவறையில் பழுதான கதவுகளையும் மின் விளக்கையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..