உசிலம்பட்டி -நெகிழி இல்லா தமிழகம். பள்ளிக்குழந்தைகளுக்கு நீதிபதி யோசனை

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் நீதிபதி பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய பசுமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உசிலம்பட்டிவட்ட சட்ட பணிகள் குழு நடத்தும் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மக்காத குப்பையான பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்தும் மக்கும் குப்பைகள் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் கலந்து மாணவர்களுக்கு மட்கும் குப்பை, மட்காத குப்பை பற்றியும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் மாணவர்களிடம் விளக்கிக் கூறினார். அதனைதொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தியும், நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாணவர்கள் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்றனர். இநநிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு, உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தை சார்ந்த 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..