Home செய்திகள் ஐஜி., அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

ஐஜி., அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

by mohan

புவி வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க தென் மண்டல காவல் துறைத் தலைவர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன், உத்தரவிட்டார். இதன்படி, தென் மண்டல காவல் துறைத்தலைவர். அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடுவிழா இன்று (11/11/19) காலைநடைபெற்றது. தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட இம்மண்ணின் மரங்களான கடம்பு, அரசு, வேங்கை, நாகலிங்கம், மகிழம், இலுப்பை, கருங்காளி, வலுக்கை, கூந்தப்பனை, செந்சந்தனம், பாடாதி, மகாகனி, மந்தாரை, மலைவேம்பு, பலா, புங்கை, பூவரசு, சரக்கொன்றை, செந்நாவல், மருதம், பிள்ளமருது, மகாவில்வம் ஆகிய மரக்கன்றுகளையும், மனோரஞ்சிதம், செம்பகம், பாரிஜாதம், பவளமல்லி, அடுக்கு நந்தியாவட்டை ஆகிய மலர் செடிகளையும் தென் மண்டல காவல் துறைத் தலைவர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன் நட்டுவைத்தார். இதில் அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!