Home செய்திகள் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் காலமானார்.!

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் காலமானார்.!

by Askar

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்தவர் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் (வயது 87) .  இவர் டி.எஸ். நாராயணய்யர், சீதாலட்சுமிக்கு மகனாக பிறந்தார். கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறைஇயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பல. இவரது சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானபோதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தது குறிப்பிடத்தக்கது. டி.என்.சேஷன் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப்பொறுப்புகை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 1990ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!