தமிழக துணை முதல்வருக்கு ‘தங்கத் தமிழ் மகன்’ விருது.

அமெரிக்காவில் தங்கத் தமிழ் மகன் விருது பெற்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அரசு முறை பயணமாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவில் சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் , 10 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.

சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக தங்க தமிழ் மகன் விருது தமிழக துணை முதல்வருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது Congressman ராஜா கிருஷ்ணமூர்த்தி, Schaumburg மேயர் டாம் டெய்லி, Oakbrook மேயர் கோபால் ஆல் மலானி ,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு வீட்டுவசதி துறை அரசு செயலர் ச.கிருஷ்ணன், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் மற்றும் தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image