பணம் பிறந்த கதை.மும்பை வங்கி அதிகாரி மாணவர்களுடன் கலந்துரையாடல்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பணம் பிறந்த கதை என்கிற தலைப்பில் பணம் வளர்ந்த தகவல்களை மும்பை வங்கி அதிகாரி விளக்கினார்.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மும்பை வங்கி அதிகாரி சேதுராமன் சாத்தப்பன் பணம் பிறந்த கதை தொடர்பாக விளக்கினார்.மாணவர்களிடம் அவர் பேசுகையில்,சேமிப்பு எவ்வளவு அவசியமானது என்பது நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..இளம் வயதில் சதுரங்க விளையாட்டு ,ஆங்கிலப் புலமை , புத்தக வாசிப்பு ஆகிய மூன்றுக்கும் நீங்கள் அவசியம் முக்கியத்துவம் தரவேண்டும் ..

நான்கு வகையில் பணம் வளர்ந்து வந்துள்ளது.. பண்டமாற்று முறை, ,கமாடிட்டி, , பேப்பர் பணம், நான்காவது பிளாஸ்டிக் மணி . பிளாஸ்டிக் மணி என்பது பிளாஸ்டிக்கால் ஆன பணம் என்று ஒரு வகையிலும் இன்னொரு வகையில் ஏடிஎம் கார்டு , டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக பணம் நாம் வழங்குவது பெற்றுக் கொள்வது போன்றவையும் பிளாஸ்டிக் மணியில் வரும் .தற்போது உள்ள அரசு மொபைல் போன் மூலமாக அதிகமான பணப்பரிவர்த்தனை செய்ய சொல்கிறது .இதனால் பணம் அச்சடிக்க ஆகும் செலவு குறையும் . பணத்தை சேமிக்க வங்கி , உண்டியல் இரண்டுமே அருமையான வழிகளாகும் . இவ்வாறு பேசினார்.மாணவர்கள் நதியா,ஜனஸ்ரீ ,ஜோயல்,அய்யப்பன்,வெங்கட்ராமன் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு விளக்கம் பெற்றனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..