திருமண விழாவில் மணமக்களுக்கும், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கிய “மக்கள் பாதை”..

கமுதி உ.கரிசல்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றஅது. இத்திருமணத்தை ஒட்டி இவ்விழாவில் மக்கள் பாதை சார்பாக மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வருகைபுரிந்த வருந்தினர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உலகம் வெப்பமயமாதலலை தடுக்கும் விதமாக தாய்மண் திட்டத்தின் கீழ் மணமக்களுக்கும், பொதுமக்களுக்கும் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றிய மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பிரபாகரன், கமுதி ஒன்றிய மக்கள் பாதை கிராம சபை மேற்பார்வையாளர் யோககுமார், முதுகுளத்தூர் ஒன்றிய மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கண்ணன்,கடலாடி ஒன்றிய மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நளினிகாந், வனத்துகுள் கமுதி நண்பர்கள் பாலா, வேல்முருகன் ஆகியோர் மரகன்றுகள் வழங்கினர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image