நூதன முறையில் திருட முயற்சி, ஆனாலும் முடியவில்லை.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் அலார ஒலிப்பெருக்கியில் மைதா மாவை வைத்து அடைத்துவிட்டு திருடர்கள் மேற்கொண்ட கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை தப்பியது.

புல்வாய்பட்டி கிராமத்தில் கஞ்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

ஊரின் எல்லையில் அக்கம்பக்கம் வீடுகள் இல்லாத இடத்தில் அமைந்துள்ள இந்த வங்கியில் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அலார ஒலிப்பெருக்கியின் சத்தம் கேட்காமல் இருக்க அதில் மைதாமாவை வைத்து அடைத்தும் சிசிடிவி கேமராவை திருப்பிவைத்தும், இரும்பு சுழல் கதவை உடைத்தும் விட்டு உள்ளே சென்றுள்ளனர். உள்ளே இருந்த இரும்புப் பெட்டகத்தை உடைக்க முடியாமல் போனதால், அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..