கீழக்கரை நகராட்சிக்கு உடனடியாக நிரந்தர ஆணையர் நியமிக்க கலந்தாய்வு கூட்டம்…

தற்போது கீழக்கரை நகராட்சியில் நிரந்தர ஆணையர் இல்லாத காரணத்தால் நகராட்சி பணிகள் தொய்வு நிலை அடைந்து சரியான முடிவு எட்டாமல் கீழக்கரை பொதுமக்கள் தொடர்ந்து இன்னல் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக வாறுகால்கள் சிதிலமடைந்தும், சாலைகள் பழுது அடைந்தும் மற்றும் தெரு விளக்குகள் பல இடங்களில் எரியாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருட்டான பகுதியில் தட்டுத்தடுமாறி நடக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.நிரந்தர ஆணையர் இல்லாத காரணத்தால் கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் நாய்களை அகற்ற கோரி கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் மனு செய்தும் மெத்தனப்போக்கை கடைபிடித்த நகராட்சி நிர்வாகம் சில நாட்களுக்கு முன் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்ட கேள்விக்கு கீழக்கரை அரசு மருத்துவமனை அளித்த பதிலால் ஊடகங்கள் மூலம் ஏற்பட்ட செய்திகளால் விழித்துக்கொண்ட கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.

இதை கருத்தில் கொண்டு கீழக்கரைக்கு நிரந்தர ஆணையர் பணியமர்த்த அரசை வலியுறுத்த இன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை சார்பாக வடக்கு கிளை மர்கஸில் கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.இந்த கூட்டத்திற்கு கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு, எட்டு ஜமாஅத்கள் மற்றும் சமூக சமுதாய அமைப்புகளுக்கு அழைப்பு செய்து இருந்தனர்.

இந்த கலந்தாய்வு கூட்டம் வடக்கு கிளை தலைவர் கண்மணி சீனி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை அனைத்து கிளை பிரதிநிதிகள், சட்ட விழிப்புணர்வு இயக்க பிரதிநிதிகள், மக்கள் நல பாதுகாப்புக்கழக பிரதிநிதிகள்,வெல்பர் கட்சி பிரதிகள், மஜ்மாவுல் ஹைராத்தியா கல்வி அறக்கட்டளை பிரதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக உடனடியாக கீழக்கரை நகராட்சிக்கு உடனடியாக ஆணையர் நியமிக்க வலியுறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.நிறைவில் வடக்கு கிளை பொருளாளர் அன்வர்தீன் நன்றி கூறினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image