விடுமுறை நாளில் கள்ள சந்தையில் விற்பதற்கு லாரியில் கடத்தி வந்த 1200 மது பாட்டில்கள் பறிமுதல்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் போலீசார் சோதனையில் விடுமுறை தினத்தில் (நவ.10 மிலாது நபி ) டாஸ்மாக் விடுமுறை என்பதால் கள்ளசந்தையில் விற்பனை செய்ய மினி லாரியில் கடத்த வந்த ரூ. 1. 50 லட்சம் மதிப்பிலான 1,200 மது பாட்டில்களை மண்டபம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இராமேஸ்வரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அடிக்கடி புகார் சென்றது. இதனடிப்படையில் இராமேஸ்வரம் அருகே மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அது வழி வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தினர். ஆனால், மினி லாரி ஓட்டுநர் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் சாலையில் தாறுமாறாக சென்றார். மினி லாரியை போலீசார் விரட்டி பிடித்து சோதனையிட்டனர்.

அதில் 24 அட்டைப் பெட்டிகளில் 1,200 மது பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. மது பாட்டில்கள், மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மினி லாரி டிரைவர் ஆனந்தன் திருச்சியை சேர்ந்தவர் என தெரிந்தது.

இது குறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து மண்டபம் டாஸ்மார்க் மேற்பார்வையாளர், விற்பனையாளரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்த மது பாட்டில்களின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என போலீசார் கூறினர். கைது செய்யப்பட்ட மினி லாரி டிரைவர் ஆனந்தனை, இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..