வள்ளுவரைவைத்து அரசியல் அல்லது,குழுப்பம் செய்வதா.! பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்.!

 தஞ்சாவூா் மாவட்டம் பிள்ளையாா்ப்பட்டியில் உள்ள தெய்வப் புலவா் திருவள்ளுவா் சிலைக்கு அவமரியாதை செய்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.

திருவள்ளுவரை விவாத பொருளாக மாற்றுவதும், கேலிக்குரியதாகவும், அவமானப் படுத்தக் கூடிய வகையிலும் நடத்துவதும், தமிழ் உணா்வுள்ள ஒரு தமிழன் கூட, தமிழன் மட்டுமல்ல தமிழ் மீது பற்று கொண்ட யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். தமிழனாக பிறக்காதவன் கூட ஏற்றுக் கொள்ள மாட்டான். தற்போது நடந்திருக்கக் கூடிய செயல் திட்டமிட்ட சதியாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

எனவே அரசு, துரித நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.வள்ளுவப் பெருந்தகைக்கு ஒரு அவமானம் ஏற்படுகிறது என்றால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நான் கருதுகின்றேன்.

ஆகவே வள்ளுவரை வைத்து அரசியல் நடத்த துடிக்கும் அரசியல்வாதிகளை அல்லது குழப்பவாதிகளை உடனே அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வள்ளுவப் பெருந்தகை மீது பற்று கொண்டவா்கள், தமிழின் மீது பற்று கொண்டவா்கள், தமிழ் அன்னைக்கு பிறந்தவா்கள் என்கின்ற மனநிலையோடுக் கூட வள்ளுவப் பெருந்தகையை நடத்த வேண்டும். விவாதங்கள் மற்றவற்றிற்காக நடத்த வேண்டும், ஆனால் வள்ளுவருக்கும் இன்று விவாதங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அதை மனதில் வைத்துக் கொண்டு, இதுபோல் அவமானகரமான செயலை செய்வது, தமிழா்களை உலக அரங்கில் தலைகுனிய வைக்கும் என்று நான் நம்புகின்றேன். இந்த செயலை செய்தவன் தமிழ் இன துரோகியாகத்தான் இருக்க முடியும் என்பதில் தமிழக அரசும், தமிழக மக்களும் உணா்ந்து உடனடி நடவடிக்கைக்கு முன்னெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image