இந்தியா வெளியிட்டுள்ள வரைபடம், எதிர்க்கும் பாகிஸ்தான்..!

காஷ்மீரைப் பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் புதிய இந்திய வரைபடம் வெளியிடப்பட்டது. இதில் புதிதாகப் பிரிக்கப்பட்ட இரு யூனியன் பிரதேசங்களும் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா வெளியிட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் பிராந்திய வரைபடத்தில் கில்ஜித் – பாகிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகள் இந்தியாவின் எல்லைக்குள் உள்ளதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த வரைபடம் தவறானது என்று கூறியுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், இதனை சட்டப்பூர்வமாக ஏற்றுகொள்ள முடியாது எனவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை இந்தியா அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image