Home செய்திகள் பஞ்சமி நிலங்களை விரைவில் மீட்டெடுத்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.! திருமாவளவன் வலியுறுத்தல்.!

பஞ்சமி நிலங்களை விரைவில் மீட்டெடுத்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.! திருமாவளவன் வலியுறுத்தல்.!

by Askar

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது சட்டவிரோத செயலாகும். உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 12 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.

இதில் பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது பஞ்சமி நிலங்களை கண்டறிந்து மீட்பதற்கான ஆணையத்தை அமைத்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த ஆணையம் செயல்பட வில்லை.

பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான ஆணையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த தெந்த மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் உள்ளன? அவற்றில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளன? என்பதை கண்டறிந்து ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பஞ்சமி நிலங்கள் மீட்பு தொடர்பான வி‌ஷயத்தில் முன்பு எந்தவித கருத்தும் தெரிவிக்காத டாக்டர் ராமதாஸ், எச்.ராஜா ஆகியோர் அரசியல் ஆதாயத்திற்காக தற்போது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

இதை வைத்து தி.மு.க.வை சீண்டுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் கூறிய கருத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய பதில் அளித்து உள்ளார்.

பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அவர்கள் அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள். அதற்கு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக பஞ்சமி நில மீட்பு குறித்து பேசுபவர்கள் மக்களிடம் அம்பலப்பட்டு போவார்கள் என்று கூறியுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!