Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை நலன் கருதி இராமநாதபுரம் ஆட்சியரை சந்தித்த கீழக்கரை முக்கிய பிரமுகர்…

கீழக்கரை நலன் கருதி இராமநாதபுரம் ஆட்சியரை சந்தித்த கீழக்கரை முக்கிய பிரமுகர்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராக ராவை கீழக்கரையைச் சார்ந்த கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிறுவனர் செய்யது ஸலாஹுத்தீன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து  கீழக்கரை சுட்டுவட்டார பகுதியில் இருக்கும் நீர்நிலைகளான வண்ணான் துறை,பாலையார், பல்வா ஊரணி மற்றும் கும்மிடுமதுரை நீர் நிலைகளை மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்போடு கருவேல மரங்களை அகற்றி ஆழப்படுத்தவும், கீழக்கரை தாலுகாவை சேர்ந்த பயணாளிகள் நலன் கருதி புதிதாக கட்டப்பட்டு வரும் தாலுகா அலுவலகத்திற்கு உடனடியாக தார் சாலை அமைத்து திறப்பு விழா நடத்தி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவும் தாலுகா அலுவலக பகுதியில் சுற்றுவட்டார மக்கள் நலன் கருதி கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பாக மேல் நிலை தண்ணீர் தொட்டி கட்ட இருப்பதால் இது சம்பந்தமான ஆலோசனையும் மற்றும் கீழக்கரை கடற்கரையில் மத்திய அரசு நிதியான ரூபாய் ஒரு கோடியே பத்து லட்சம் மதிப்பீட்டில் கட்ட இருக்கும் கடல் நீர் தடுப்பு சுவரை பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நலன் கருதி கீழக்கரை கோல்டன் பீச் வரை நீடிப்பு செய்யவும் இதன் மூலம் கீழக்கரை கோல்டன் பீச்சை தன் அறக்கட்டளை மூலம் மேலும் நவீனப்படுத்தி பொதுமக்களுக்கு பொழுது போக்கு பகுதியாக மாற்றி தருவதாகவும்  கோரிக்கை வைத்தார்.

இந்த சந்திப்பில் கீழக்கரை அமீர் ரிஸ்வான், கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிர்வாகி சித்தீக் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!