சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

கீழடியில் கிடைக்கப்பெற்ற தமிழர்களின் புராதன பொருள்களை காட்சிப்படுத்த, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டத்திலுள்ள கொந்தகையில் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் உலக தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதை கொண்டாடும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலகில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் மண்ணில்தான் என மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதராஸ் மாகாணமாக தமிழ்நாடு அழைக்கப்பட்டது என்றும், 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியமைந்த பின்னர் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது என்றும் முதலமைச்சர் கூறினார்.

விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..