நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

நேபாளத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தை சீர்குலைத்த இந்த நிலநடுக்கத்தால், 9 ஆயிரம் பேர் பலியாகினர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image