மதுரையில் 20லட்சம் மதிப்பிலான காலாவதியான உயர்தர சாக்லேட், ஜெல்லிகள் விற்பனை – உணவுத்துறை அதிகாரிகள் சோதனையில் வெளியான அதிர்ச்சி.

மதுரை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முனிசாலை பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்பராக் போன்றவைகள் அனுமதியின்றி பள்ளிமாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதே பகுதிகளில் காலாவதியான உயர்தர வெளிநாட்டு சாக்லேட் , ஜெல்லி, பிஸ்கெட்கள், குளிர்பான கலவைகள் உள்ளிட்ட இனிப்பு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிரடியாக சோதனையை தொடர்ந்த அதிகாரிகளுக்கு அடுதடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. காலவதியான சாக்லேட் பொருட்களை புதுப்பிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதும், இதனை குடோனில் டன் கணக்கில் அடுக்கிவைத்திருப்பதும் தெரியவந்தது இதனையடுத்து அதிகாரிகள் குடோனுக்கு சீல்வைத்து அங்கிருந்த 20 லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட உணவுகள் மண்ணில் புதைக்கப்படும்

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட உணவுத்துறை அதிகாரி சோமசுந்தரம் பேசுகையில் : இதுபோன்று ஏராளமான கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைக்கு விழிப்புணர்வு இன்றி காலாவதியான உணவு பொருட்களை உண்ணுவதால் உடல் நிலை சீர்கேடு ஏற்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முன்பு தரமற்ற உணவுகள் விற்பனை செய்வது குறித்தும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இது குறித்து மருத்துவரிடம் கேட்ட பொழுது மருத்துவர் கொடுத்த பதில் இது போன்ற ஜெல்லி மற்றும் காலாவதியான மிட்டாய்கள் உள்ளிட்ட குழந்தைகளுக்குக் கொடுத்தால் உடல் புற்று நோய் மற்றும் சிறுநீரக பிரச்சனை மூளை பாதிப்பு உள்ளிட்ட குழந்தைகளுக்குபல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என தெரிவித்தனர் பொதுமக்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் தின்பண்டங்களை வீட்டிலேயே தயாரித்து கொடுக்க வேண்டுமெனவும் கடைகளில் வாங்கி கொடுக்க வேண்டாம் எனவும் எச்சரித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..