வேலூர் மாவட்டத்தில் 8,573 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் திறந்த நிலையில் ஆபத்தாக உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட மாநகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதைதொடர்ந்து வேலூர் மாவட்டம் முழுவதும் பேரூராட்சி பகுதிகளில் 70 ஆழ்துளை கிணறுகள், கிராம பகுதிகளில் 5655, மாநகராட்சி பகுதிகளில் 42, நகராட்சி பகுதிகளில் 2,806 என மொத்தம் 8,573 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் மேலும், மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக 9498035000 என்ற மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் நம்பருக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் புகார் தெரிவிக்கும் நபர்கள் தற்காலிகமாக அந்த ஆழ்துளை கிணறுகளை மூடுமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image