சமயநல்லுாா்- பள்ளிக்குழந்தைகள் உயிருடன் விளையாடும் பள்ளி நிா்வாகம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சமயநல்லுாாில் செயல்பட்டு வருகிறது ஜான் பிாிட்மோ கல்வி நிறுவனங்கள்.சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிக்குழந்தைகள் படிக்கும் கல்வி வளாகத்தில் வகுப்பறை அருகே ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் திறந்த நிலையிலேயே இருந்துள்ளது.திருச்சியில் சிறுவன் சுஜித்தின் மரணத்திற்குப் பின் தமிழக அரசு அனைத்து பயன்பாடற்ற ஆழ்துளைக்கிணறுகளை மூட உத்தரவிட்டது.இதனையடுத்து தீபாவளிக்குப் பின் பள்ளி திறக்கப்பட்டப்பின்னும் இந்தக்குழி மூடவில்லையாம்.

இது குறித்து பெற்றோா்கள் பள்ளி நிா்வாகத்திடம் முறையிட்ட பின் கோணி சாக்கினால் குழி ஓட்டையில் கட்டி வைத்துள்ளனா்.இப்பகுதி பள்ளி வளாகத்தில் சுமாா் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உள்ளனா்.ஆபத்தை அறியாத எல.கே.ஜி குழந்தைகள் இன்று காலை 31.10.19 சாக்கின் மேல் ஏறி விளையாடி உள்ளனா்.அரசு உத்தரவிட்ட பின்பும் அதனை மதிக்காமல் குழியை முறையாக மூடாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது பள்ளி நிா்வாகம்.மீண்டும் திருச்சியைப் போன்று துயரச்சம்பவத்திற்கு அடிக்கல் நாட்டும் இப்பள்ளி நிா்வாகத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

உசிலை சிந்தனியா

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image