ஆரணி – கிராமமக்கள் சாலையில் நாற்றுநடும் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதராத சிறுமூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராமமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமூர் கிராமத்தில் உள்ள தர்மராஜா கோவில் தெருவில் சேரும் சகதியுமாக உள்ள தெருவை சரிசெய்யக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது ததொடர்ந்து மழைபெய்து வருவதால் சாலைமிகவும் மோசமாகி சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பள்ளிசெல்லும் குழந்தைகள் அவசரத்திற்கு வாகனங்கள் செல்லமுடியாத அவலநிலையில் உள்ளது.இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதிமக்கள் உடனடியாக சிமெண்ட்சாலை அமைத்து பக்ககால்வாய் அமைத்துதர வேண்டும் என சேற்றில் இறங்கி நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஊராட்சிநிர்வாகம் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் உள்ள சேற்றினை அகற்றி வருகின்றனர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image