பசும்பொன் தேவர் குருபூஜையில் 634 பயனாளிகளுக்கு ரூ.3.59 கோடியில் அரசு நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது பிறந்த நாள் விழா, 57-வது குருபூஜையை முன்னிட்டு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 634 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 58 லட்சத்து 87 ஆயிரத்து 184 மதிப்பிலான நலத்திட்ட உதவி, கடனுதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன்(ராமநாதபுரம்), எஸ்.பாண்டி (முதுகுளத்தூர்), கருணாஸ் (திருவாடானை), என்.சதன்பிரபாகர்(பரமக்குடி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (முகூபொ) ம.கயிலைச்செல்வம் நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..