இராமநாதபுரம் அருகே நாயிடம் கடிபட்டு மக்களிடம் தஞ்சமடைந்த பெண் மான்

இராமேஸ்வரம் – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இன்று 31.10.19 காலை கோரை புல்லை மேய்ந்த மான் , தண்ணீர் குடிப்பதற்காக வழுதூர் பகுதியில் வந்தது. அப்போது நாய் விரட்டி கடித்தபோது தப்பிபிழைத்த மான் ஊருக்குள் தஞ்சமடைந்தது. மானை மீட்டு முதலுதவி அளித்த கிராம மக்கள் ராமநாதபுரம் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் சதீஷ், வனவர் மதிவாணன் உள்ளிட்ட வன ஊழியர்கள் பொது மக்களிடமிருந்து மானை மீட்டு கால்நடை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து தேர்த்தங்கல் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். வனச்சரகர் சதீஷ் கூறுகையில், இரை தேடிய மான் தண்ணீர் குடிக்க வந்த போது நாயிடம் கடிபட்ட நிலையில் வழுதூர் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது. ஐந்து வயது பெண் மானின் உடலில் 3 இடங்களில் நாய் கடித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்தாண்டில் மட்டும் இது வரை 15 மான் குட்டிகளை மீட்டு காட்டுப்பகுதிகளில் விட்டுள்ளோம் என்றார்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image