மாற்றுத்திறனாளியை பணிநீக்கம் செய்த தனியார் கல்லூரியை கண்டித்து TARATDAC- சார்பில் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வேலை பார்த்து வந்த மாற்றுத்திறனாளி சதீஷ்குமார் என்பவரை எவ்வித முன்னறிவிப்புமின்றி கல்லூரி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. அதனை கண்டித்து இன்று (31.10.19) நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.போராட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்து இன்று (31.10.19) மாலை 05.00 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காந்திரோடு குளத்து பைபாஸ் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இப்பகுதியிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இன்று மாலை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,பழனி நகர்குழு சார்பில் S. மாலதி – நகர தலைவர் P. தங்கவேல் – நகர செயலாளர் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர்   அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..