பழனி அரசு மருத்துவமணை அருகே செயல்பாடின்றி இருக்கும் ஏடிஎம்

பழனி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள SBI ATM செயல்படாமல் உள்ளது. அதுமட்டுமின்றி ஏ.டி.எம் இன் இரும்பு படிகள் பராமரிப்பின்றி உடைந்து ,சற்று விலகிய நிலையில் உள்ளது.இதனால் பணம் பரிவர்த்தனைக்காகஅங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்து தாண்டித் தாண்டிச் செல்கின்றனர். தவறி விழுந்தால் உயிரிழப்பு அல்லது கால் முறிவு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, ஒரு உயிரிழப்பு நடப்பதற்கு முன் வங்கி நிர்வாகம் இந்த படியை சரிசெய்வதோடு ATM எந்திரமும் சரியாக செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image