மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு

வருகின்ற 30.10.2019-ம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால், மதுரை மாநகரில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

* 30.10.2019 அன்று லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணிவரை மதுரை மாநகருக்குள் நுழைய தடை செய்யப்படுகிறது.

*விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.

*நந்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் திரும்பி மாற்று பாதையாக ராஜா முத்தையாமன்றம், K.K.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, P.T.R. பாலம், காமராஜர் சாலை வழியாக செல்லவேண்டும்.

*மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், இளைஞர் விடுதி (YOUTH HOSTEL), பந்தயத்திடல் சாலை (RACE COURSE ROAD), தாமரைத் தொட்டி, புது நத்தம் ரோடு வழியாக செல்லவேண்டும்.

*வடக்கு வெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேஷன் ரோடு, M.M.லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி கான்சாபுரம் ரோடு, E2 சாலை, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாக செல்ல வேண்டும்.

* திண்டுக்கல் ரோடு – தத்தனேரி பகுதியிலிருந்து அழகர்கோவில் ரோடு, நத்தம் ரோடு செல்லும் வாகனங்கள் குலமங்கலம் ரோடு, பாலம் ஸ்டேஷன் ரோடு சந்திப்பில் திரும்பி குலமங்கலம் ரோடு வழியாக சென்று மாற்று பாதைகளில் செல்ல வேண்டும்.

*மேலமடை பகுதியிலிருந்து கோரிப்பளையம் நோக்கி மதுரை மாநகருக்குள் வரும் வாகனங்கள் ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்லவேண்டும்.

*தேவர் ஜெயந்தி விழாவிற்காக நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர பசும்பொன் செல்லும் இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

*தேவர் ஜெயந்தி விழாவிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் வருவோர் இருவர் மட்டுமே தலைக்கவசம் அணிந்து பயணிக்கவும், நான்கு சக்கர வாகனத்தில் வருவோர் அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் இருக்கை கச்சை (SEAT BELT) அணிந்து பயணிக்க வேண்டும்.

எனவே 30.10.2019-ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, வியாபார பெருமக்கள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களின் நலன்கருதி இதில் குறிப்பிட்டுள்ள மாற்றுப்பாதைகளை தற்காலிகமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..