Home செய்திகள்உலக செய்திகள் பர்தா அணிவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை..!” – அனுரகுமார திசாநாயக

பர்தா அணிவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை..!” – அனுரகுமார திசாநாயக

by mohan

“தமிழ் பெண்களைப் பார்த்து ‘குங்குமப்பொட்டை அழித்துக்கொள்’ என்றோ, முஸ்லிம் பெண்களைப் பார்த்து ‘பர்தாவை அணியாதே’ என்றோ கூற யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.இலங்கை திகாரி நகரில், மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக கலந்துகொண்டு பேசியதாவது; “கடந்த காலங்களில் இந்த நாடு மிகப் பெரிய மோதல்களை சந்தித்துள்ளது. இனியும் அவ்வாறான நிலை ஏற்படாத நாடாக நாம் முன்னோக்கிச் செல்ல முயற்சிக்க வேண்டும். இதில், சகல மக்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும்.தமிழ் பெண்களைப் பார்த்து ‘குங்குமப்பொட்டை அழித்துக்கொள்’ என்றோ, முஸ்லிம் பெண்களைப் பார்த்து ‘பர்தாவை அணியாதே’ என்றோ கூற யாருக்கும் அதிகாரம் இல்லை. அடிப்படை தேவைகளை மக்களுக்கு வழங்க முடியாத ஆட்சியே இன்று நடைபெறுகிறது. இதில் இருந்து, நாட்டையும் மக்களையும் மீட்க வேண்டும். நாடு இன்று மிகப் பெரிய கடன் நெருக்கடியில் உள்ளது. கடன்களில் இருந்து நாம் எவ்வாறு மீள்வது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது குறித்து ஆழமாக கலந்துரையாடி நாங்கள் தீர்வுகளை உருவாக்கியுள்ளோம். கடன்களை சரியான அபிவிருத்திக்கு உட்படுத்தியிருந்தால் இன்று நமக்கு இந்த நிலைமை உருவாகியிருக்காது. கடன்களை திரும்பச் செலுத்தும் உறுதியான அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆறு வருடங்களில் முழுக் கடனையும் திரும்ப செலுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவோம். கிராமிய மக்களின் கடன் நெருக்கடியில் இருந்து அவர்களை மீட்கும் உறுதியான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்போம். குறிப்பாக, இன்று வடக்கில்தான் மக்கள் அதிகமாக கடன்களில் நெருக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இவர்களை மீட்டெடுக்க வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். விவசாயம், தொழில்வாய்ப்பு மூலமாகவே அவர்களை மீட்டெடுக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார். – சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!