“தீவிரவாதம் உருவாக அனுமதிக்க மாட்டோம்..!” – அநுரவின் தேர்தல் அறிக்கை

நாட்டில் எந்தவொரு தீவிரவாதமும் உருவாக அனுமதிக்க மாட்டோம்” என்று, இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார். இலங்கையின் 8வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது.இதில், ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், அமைச்சர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே உட்பட 35 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் அறிக்கை சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் 5 ஆண்டுகளில் நிறுத்தப்படும்.மக்களின் வரிப்பணத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களது பாரியார்களுக்கும் வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் நிறுத்தப்படும்.அமைச்சரவை 30 ஆக மட்டுப்படுத்தப்படும் (அமைச்சர்கள் 30, பிரதி அமைச்சர்கள் 30).
ராஜாங்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் இனிமேல் இருக்கப்போவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகனத்தை பெற்றுக்கொள்வதற்கான சலுகைகள் இல்லாம செய்யப்படும். ஜனாதிபதி தேவைக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி 90 விகிதமாக குறைக்கப்படும்.நாடு முழுவதும் காணப்படும் ஜனாதிபதி மாளிகைகள், சுற்றுலா ஹோட்டல்கள், கலாச்சார மையங்கள் மற்றும் நூலகங்களாக மாற்றப்படும்.திருடப்பட்ட மக்களின் பணத்தை மீண்டும் மக்களிடமே வழங்கப்படும்.நாட்டில் எந்தவொரு தீவிரவாதமும் உருவாக அனுமதிக்க மாட்டோம்.”

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..